வழிபாடு
அட்சய திருதியை வீட்டு அலங்காரம்

அட்சய திருதியை வீட்டு அலங்காரம்

Published On 2022-05-03 13:20 IST   |   Update On 2022-05-03 13:20:00 IST
லட்சுமி குபேரர் பூஜை அறையில் மகாலட்சுமி, குபேரர் படங்கள் இருந்தால் மஞ்சள் மலர்கள், அல்லது மல்லிகை மலர்களால் அலங்கரித்து அந்த படத்தின் முன் படியில் குத்தரிசியை நிரப்பி வைக்கலாம்.
அட்சய திருதியை வீட்டு அலங்காரம் அட்சய திருதியை என்பது செல்வ வளம் தரும் நாளாக போற்றப்படுகிறது. அன்றைய தினம் மகாலட்சுமி அனைவரின் வீட்டிற்கும் வருகிறாள் என்பது ஐதீகம்.

அட்சய திருதியை அன்று வீட்டை சுத்தம் செய்து, மாவிலை தோரணங்களால் அலங்கரித்து, பூஜை அறையை அலங்கரித்து தானம் செய்ய வேண்டும். அன்றைய தினம் முனை முறியாத பச்சரிசி வாங்குவது நல்லது. கைக்குத்தல் அரிசி தான் முனை முறியாத அரிசி. அந்த முனை முறியாத அரிசியை புடைத்து எடுத்து, பணப் பெட்டியில், பீரோவில் கொஞ்சம் வைப்பது நல்லது.

லட்சுமி குபேரர் பூஜை அறையில் மகாலட்சுமி, குபேரர் படங்கள் இருந்தால் மஞ்சள் மலர்கள், அல்லது மல்லிகை மலர்களால் அலங்கரித்து அந்த படத்தின் முன் படியில் குத்தரிசியை நிரப்பி வைக்கலாம். இதனால் வீட்டில் செல்வம் பெருகும்.

மஞ்சள் மகிமை மங்களகரமானது மஞ்சள். இதில் அனைத்து மகிமையும் உள்ளது. இதில் கஸ்தூரி மஞ்சள் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தனி சக்தி உண்டு. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம். மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம். தங்கம் என்பது லட்சுமியின் ஒரு அம்சம் என்றாலும் வெள்ளியால் பூஜை அறையை அலங்கரிக்கலாம். தங்கம் வாங்கினால்தான் நல்லது என்பது தவறு. அதற்குப் பதிலாக முனை முறியாத பச்சரிசி, மஞ்சள், வெள்ளி போன்ற பொருட்களெல்லாம் பூஜை அறையில் வாங்கி வைக்கும் போது நிச்சயம் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

Similar News