வழிபாடு
அட்சய திருதியை கதை: பெண் மானம் காத்த தினம்
கிருஷ்ண பகவான் பாஞ்சாலியின் மானம் காத்த தினம் அட்சய திருதியை ஆகும். இக்கட்டான சூழ்நிலையில் உள்ளவர்கள் பாஞ்சாலி சொன்ன அபய மந்திரத்தைச் சொல்லி கிருஷ்ணரின் அனுக்கிரகம் பெறலாம்.
அட்சய திருதியை தினத்தை பெண் மானம் காத்த தினம் என அழைக்கலாம். பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் சூதாடி கவுரவர்களிடம் தனது சொத்துக்களை இழந்தார். அதோடு தன் மனைவி பாஞ்சாலியையும் பந்தயப் பொருளாக வைத்து இழந்தார்.
துர்க்குணம் கொண்ட துரியோதனன் பாஞ்சாலியின் சேலையை உரிந்து மானபங்கப்படுத்த உத்தரவிட்டான். மானம் காக்க பாஞ்சாலி கதறினாள். பீஷ்மர் போன்ற மகாத்மாக்கள் கூட அவளுக்கு உதவ முன் வரவில்லை. இந்த நிலையில் தெய்வமே துணை என.....
சங்கு சக்ர கதாபாணி ஸ்ரீமத் துவாராக நிலய அச்சுதா!
ஹே கோவிந்த! புண்டரீகாக்ஷ! ரகக்ஷம் சரணாகதம்... என்று பாஞ்சாலி கத்தினாள்.
இந்த சமயத்தில், துவாரகையில் ஸ்ரீ கிருஷ்ணர் தன் தேவியரான ருக்மணி, சத்யபாமாவுடன் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தார். பாஞ்சாலியின் கூக்குரல் அவரது காதில் கேட்டது. ஒருகணம் தாமதித்தால் கூட அந்த அபலைப் பெண்ணின் மானம் பறிபோகும் என்பதால் ஊஞ்சலில் இருந்த படியே கையை உயர்த்தி அட்சய என்றார். அவரது கையிலிருந்து புறப்பட்ட ஆடை, பாஞ்சாலியின் உடலைச் சுற்றியது.
துச்சாதனன் பாஞ்சாலி சேலையை இழுக்க, இழுக்க அது கிருஷ்ணரின் அட்சய என்ற உத்தரவால் வளர்ந்து வந்து கொண்டே இருந்தது. இதனால் துச்சாதனன் கை சோர்ந்து மயங்கி விட்டான். இப்படியாக கிருஷ்ண பகவான் பாஞ்சாலியின் மானம் காத்த தினம் அட்சய திருதியை ஆகும். இக்கட்டான சூழ்நிலையில் உள்ளவர்கள் பாஞ்சாலி சொன்ன அபய மந்திரத்தைச் சொல்லி கிருஷ்ணரின் அனுக்கிரகம் பெறலாம்.