வழிபாடு
இனிப்பு சுவை கொண்ட நூபுர கங்கை தீர்த்தம்

இனிப்பு சுவை கொண்ட நூபுர கங்கை தீர்த்தம்

Published On 2022-05-02 13:20 IST   |   Update On 2022-05-02 13:20:00 IST
அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் தீர்த்த தலம்-நூபுரகங்கை. இந்த நீரூற்றில் உள்ள தண்ணீர், சொர்க்கத்தில் இருந்து கோவிலின் மலை உச்சிக்கு வருவதாக நம்பப்படுகிறது.
கள்ளழகர் தலத்தில் அனுமனுக்கு தனியாக கருட தீர்த்தம் உள்ளது. கோவி லின் வடக்கே இருக்கும் உத்தர நாராயனவினி தீர்த்தம், மற்ற சிலைகள் நீராட உபயோகப்படுகிறது.

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் தீர்த்த தலம்-நூபுரகங்கை. இந்த நீரூற்றில் உள்ள தண்ணீர், சொர்க்கத்தில் இருந்து கோவிலின் மலை உச்சிக்கு வருவதாக நம்பப்படுகிறது.

இதில் ச்ரவனம், பவதரணி, இஷ்ரசித்தி ஆகிய மூன்று நீரூற்றுகள் கலப்பதாக சிலப்பதிகாரத்தில் குறிப்பு உள்ளது.

நூபுரகங்கை தீர்த்தம் சற்றே இனிப்பு சுவை உடையது. இதில் குளித்தால் மனிதனின் ஆசைகள் நிறைவேறுவதாக ஐதிகம். அதனால் இந்த குளத்துக்கு இஷ்டசித்தி என்று பெயர் உண்டு.

நூபுரகங்கை நீரில் இரும்பு, செம்பு உள்ளிட்ட உயர்தர தாதுக்கள் உண்டு. எனவே இது மனிதனின் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் என்கிறார்கள்.

Similar News