வழிபாடு
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தெய்வங்கள்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தெய்வங்கள்

Published On 2022-04-30 08:31 GMT   |   Update On 2022-04-30 08:31 GMT
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இறைவன் கருவறைக்கு முன்பு உள்ள மண்டபத்தில் கால சம்ஹார மூர்த்தியின் செப்புச் சிலை உள்ளது.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலின் கிழக்கிலும் மேற்கிலும் ராஜகோபுரங்கள் இருந்தாலும் மேற்கில் உள்ள 7 நிலை ராஜகோபுரம் தான் பிரதான வாயிலாக உள்ளது. கருவறையில் உள்ள அமிர்தகடேஸ்வரர் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.

கருவறை சுற்று பிரகாரத்தில் முருகன், லட்சுமி, சோமஸ்கந்தர், நடராஜர், வில்வவனேஸ்வரர், பைரவர், பஞ்சபூத லிங்கங்கள், சூரியன், அகத்தியர், சப்த கன்னியர்கள், 63 நாயன்மார்கள் உள்ளனர். இக்கோவிலில் இறைவன் கருவறைக்கு முன்பு உள்ள மண்டபத்தில் கால சம்ஹார மூர்த்தியின் செப்புச் சிலை உள்ளது.

இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு அன்னை அபிராமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
Tags:    

Similar News