வழிபாடு
சித்திரை மாத அமாவாசை: அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்
ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தீபாராதணை வழிபாடு, சிறப்பு பூஜை வழிபாடு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு ஆயிரக் கணக்கான பக்தர்கள் வாகனம் மூலம் வந்து குவிந்தனர்.
இவர்கள் அதிகாலையில் காசிக்கு நிகராக கருதப்படும் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் பூஜைகள், உள்பட சிறப்பு பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில்அமைந்துள்ள 22 புனித தீர்த்தத்தில் புனித நீராடினர். அதன் பின்னர் ராமநாதசாமி கோவிலில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து ராமநாதசுவாமி சன்னதியில் மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடைபெற்ற தீபாராதணை வழிபாடு, சிறப்பு பூஜை வழிபாடு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அமாவாசையை ஒட்டி பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் ராமேசுவரம் நகர்ப்பகுதி முழுவதும் வாகன நெரிசல் ஏற்பட்டது.