வழிபாடு
திருச்சானூர் பத்மாவதி தாயார்

பத்மாவதி பிரம்மோற்சவம்

Published On 2022-04-29 14:20 IST   |   Update On 2022-04-29 14:20:00 IST
திருமலையை தரிசனம் செய்ய வருபவர்கள், இந்த பிராட்டியை வழிபட்டுவிட்டு திரும்பி சென்றால்தான் திருமலைக்கு வந்த நோக்கம் பூர்த்தியடைவதாக ஆன்மிக நியதி இருக்கிறது.
திருமலை திருப்பதியில் அருளும் வெங்கடாஜலபதியின் வலதுபக்க மார்பில் மகாலட்சுமியும், இடது மார்பில் பத்மாவதியும் உறைவதாக ஐதீகம். ‘திருச்சானூர்’ என்னும் அலமேலுமங்காபுரத்தில் இருந்து அருள்பாலித்து வரும் தாயாருக்கு பத்மாவதி என்ற திருநாமம் வழங்கப்படுகிறது.

திருமலையை தரிசனம் செய்ய வருபவர்கள், இந்த பிராட்டியை வழிபட்டுவிட்டு திரும்பி சென்றால்தான் திருமலைக்கு வந்த நோக்கம் பூர்த்தியடைவதாக ஆன்மிக நியதி இருக்கிறது.

கார்த்திகை மாதத்தில் வரும் சுக்லபட்ச பஞ்சமி, அதாவது வளர்பிறை ஐந்தாவது நாளன்று இங்கு தொடங்கும் பிரம்மோற்சவம் தொடர்ந்து பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

Similar News