வழிபாடு
நிர்மால்ய தரிசனம்

நிர்மால்ய தரிசனம் என்றால் என்ன?

Published On 2022-04-28 12:30 IST   |   Update On 2022-04-28 14:25:00 IST
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில், சிறப்பு மிக்க பிரசித்தி பெற்ற ஆலயங்களில், ஆறு கால பூஜைகள் நடைபெறும். இந்த ஆறு கால பூஜைகளுக்கும் தனித்தனி பெயர்கள் உண்டு.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில், சிறப்பு மிக்க பிரசித்தி பெற்ற ஆலயங்களில், ஆறு கால பூஜைகள் நடைபெறும். ஆலயங்களின் சிறப்பு, வருமானத்திற்கு ஏற்ப சில கோவில்களில் ஒரு கால பூஜை முதல் ஆறு கால பூஜைகள் வரை நடத்தப்படுகின்றன.

இந்த ஆறு கால பூஜைகளுக்கும் தனித்தனி பெயர்கள் உண்டு. அதாவது காலை 6 மணிக்கு நடைபெறுவது உஷத் கால பூஜை, 8 மணிக்கு காலசந்தி பூஜை, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8 மணிக்கு இராக்கால பூஜை (இரண்டாம் ஜாம பூஜை), இரவு 10 மணிக்கு அர்த்தஜாம பூஜை என்று பெயர்.

இதில் அர்த்தஜாம பூஜைக்குப் பின்னர், இரவு நடை அடைக்கப்பட்டு மறுநாள்தான் நடை திறக்கப்படும். அப்படி மறுநாள் அதிகாலையில் நடை திறக்கப்படும்போது, முதல்நாள் இரவு செய்த அலங்காரத்துடன் இறைவனை தரிசிப்பதற்கு பெயர் ‘நிர்மால்ய தரிசனம்’ ஆகும். இந்த தரிசன முறை தமிழகத்தில் பெரும்பாலும் வழக்கத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News