வழிபாடு
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அப்பருக்கு முக்தி அளிக்கும் ஐதீக திருவிழா

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அப்பருக்கு முக்தி அளிக்கும் ஐதீக திருவிழா

Published On 2022-04-28 10:35 IST   |   Update On 2022-04-28 10:35:00 IST
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் திருக்குளத்தில் பஞ்சமூர்த்திகள அப்பர் பெருமானுக்கு கைலாய காட்சி அளிக்கும் திருவிழா நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது வீரட்டானேஸ்வரர் கோவில். இது மிகவும் பிரசித்திபெற்றது. இங்கு திருநாவுக்கரசர் சுவாமிகளை வீரட்டானேஸ்வரர் ஆட்கொண்ட புராணத்தில்அருளிய நிகழ்ச்சி 10 நாட்கள் உற்சவமாக சித்திரை மாதம் நடைபெறு வதுவழக்கம்.

அதன்படி கடந்த 17-ந் தேதி திலகவதியார், திருவாளன், திருநீற்றை அளித்தலும், வீரட்டானேஸ்வரர் அருளால் வயிற்றுவலி நோய் நீங்கி நாவரசர் என திருபெயர் பெற்ற நிகழ்ச்சி நடந்தது.

18-ந்தேதி சமணர்கள் திருநாவுக்கரசு பெருமானை நீற்றறையில் இடுதல், நஞ்சூட்டுதல், யானை ஏவுதல் நிகழ்ச்சி நடந்தது. 19-ம்தேதி கடலில் வீழ்த்திய நிகழ்ச்சி, கரையேறிய நிகழ்ச்சி, காடவர்கோனை சைவனாக்கி குணபரவீச்சுரத்தை கட்டுவித்தல் நடந்தது. 20ம்தேதி திருபெண்ணாகடத்து திருத்தூங்கானை மாடத்தில் திருவிலகச்சினை பெறுதல், திருச்சத்தி முற்றத்தில் திருவடிசூட்ட விண்ணப்பித்த நிகழ்ச்சி நடந்தது.

21-ந்தேதி திலவகதியார் நந்தவனத்திற்கு திருநாவுக்கரசர் எழுந்தருளியது, திங்களூரில் அப்பூதியடிகளின் மகனுக்கு பாம்பின் வி‌ஷம் நீக்கிய நிகழ்ச்சி நடந்தது.

22-ந்தேதி திருநாவுக்கரசர் மகேஸ்வர பூஜை செய்தல் நிகழ்ச்சியும், 23-ந்தேதி மறை கதவு திறப்பித்தருளிய நிகழ்ச்சியும், 24-ந் தேதி சமணர்களால் மறைக்கப்பட்ட சிவலிங்க பெருமானை வெளிபடுத்தி வணங்கிய நிகழ்ச்சியும் நடந்து.

25-ந் தேதி சிவ பெருமாள் பொதி சோறுதந்து வழிகாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நேற்று (26-ம்தேதி) இரவு 9 மணிக்கு திருபுகளூரில் திருநாவுக்கரசர்முக்தி அடைதல் நிகழ்ச்சி ஐதீகமுறைப்படி திருக்குளத்தில் நடந்தது.

இதனையொட்டி வெள்ளி வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் திருக்குளத்தில் பஞ்சமூர்த்திகள அப்பர் பெருமானுக்கு கைலாய காட்சி அளிக்கும் திருவிழா நடைபெற்றது.

தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா காட்சியும் அப்பர் பெருமான் இறைவனோடு ஐக்கியமாகும் ஐதீக நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டு ஹர ஹர மகாதேவா, நமச்சிவாயம் வாழ்க, சிவாயநம என விண்ணதிர கோ‌ஷம்எழுப்பி இறைவனை வழிபட்டனர்.

Similar News