வழிபாடு
கோவில் வழிபாடு

கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும்?

Published On 2022-04-27 12:22 IST   |   Update On 2022-04-27 12:22:00 IST
இறைவனை ஏன் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அதற்கு விவேகானந்தர் அளித்த ஒரு விளக்கம் சரியானதாக இருக்கும். எனவே அதை இங்கே பார்க்கலாம்.
‘எங்கும் நிறைந்திருக்கிறார் இறைவன்’ என்றுதான் அனைத்து மதங்களும் சொல்கின்றன. அப்படியிருக்கையில் ஏன் இறைவனை கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அதற்கு விவேகானந்தர் அளித்த ஒரு விளக்கம் சரியானதாக இருக்கும். எனவே அதை இங்கே பார்க்கலாம்.

ஒரு முறை விவேகானந்தர் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் எழுந்து, “நாம் ஏன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். அங்கு போகாமலேயே கடவுளை உணர முடியாதா?” என்று கேட்டார்.

அதற்கு விவேகானந்தர், “தண்ணீர் கிடைக்குமா?” என்று கேட்டார்.

உடனே அந்த நபர் அருகில் இருந்த அறைக்குச் சென்று, அங்கிருந்து சொம்பில் தண்ணீர் பிடித்து வந்து, அதை விவேகானந்தரிடம் கொடுத்தார்.

அதைப் பார்த்த விவேகானந்தர், “நான் உங்களிடம் தண்ணீர் தானே கேட்டேன். எதற்காக சொம்பு” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அந்த நபர், “சொம்பு இல்லாமல் எப்படி தண்ணீர் கொண்டு வர முடியும்” என்றார்.

இப்போது விவேகானந்தர், “ஆம் சகோதரரே.. தண்ணீர் கொண்டு வர சொம்பு தேவை. அதுபோலவே கடவுளுடன் உறவாடவும், அவரைப் பற்றி சிந்திக்கவும் தனி இடம் வேண்டும். அதுவே கோவில். அதனால்தான் கோவில் வழிபாடு மிகவும் அவசியம் என்கிறேன்” என்று விளக்கினார்.

Similar News