வழிபாடு
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நிறைவு
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் தங்க கமல வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 19-ந்தேதி தேர்த்திருவிழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 22-ந்தேதி தெப்ப உற்சவம் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று தேங்காய் பழக்கடை, புஷ்ப வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது.
முன்னதாக காலை 10 மணி அளவில் அம்மன் மூலஸ்தானத்திலிருந்து வசந்த மண்டபம் சென்றடைந்தார். 12 மணிக்கு திருமஞ்சனமும், மதியம் ஒரு மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து தங்க கமல வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து அம்மன் மூலஸ்தானம் சென்றடைந்தார். அத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.