வழிபாடு
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு மகா அபிஷேகம்

பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு மகா அபிஷேகம்

Published On 2022-04-26 08:53 IST   |   Update On 2022-04-26 08:53:00 IST
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு 51 வகையான திரவிய பொடி, பழம், பால், தயிர், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் மகா அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.
ஆடல் வல்லான் நடராஜருக்கு சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை, மாசி சதுர்த்தசி ஆகிய 6 நாட்கள் ஆறு அபிஷேகம் மட்டுமே நடைபெறும்.

சித்திரை திருவோணம் நாளான நேற்று திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு இந்த ஆண்டின் முதல் மகாஅபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இதனை முன்னிட்டு நடராஜருக்கு 51 வகையான திரவிய பொடி, பழம், பால், தயிர், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் மகா அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.

தொடர்ந்து சிறப்புமலர் அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. தீபாராதனையின்போது அப்பர் பெருமான் சிறப்பு மலர் அலங்காரத்தில் நடராஜர் மண்டபத்தில் எழுந்தருளி தரிசன காட்சி நடந்தது. இதில் நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன், டாக்டர் ராம்பிரசாத் கவுன்சிலர்கள் ராமலிங்கம், ரமேஷ், அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சீனிவாசன், சித்திரை திருவோண உபயதாரர் ஜெயஸ்ரீதர் மற்றும் சிவனடியார்கள், சிவத்தொண்டர்கள் ஆலய அர்ச்சகர்கள் சிறப்பாக செய்தனர்.

Similar News