ஆன்மிகம்
நாகராஜா கோவில்

நாகராஜா கோவிலில் கந்த சஷ்டி- சூரசம்ஹார விழா நடத்த அனுமதி கேட்டு கோரிக்கை

Published On 2021-10-28 08:10 GMT   |   Update On 2021-10-28 08:10 GMT
நாகராஜா கோவிலில் இந்த ஆண்டுக்கான விழா வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது. தொடர்ச்சியாக 10 நாட்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் சேக்தாவூது, முன்னாள் கவுன்சிலர் சாகுல்ஹமீது மற்றும் அனந்தகிராம பிராமண சமுதாய நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேற்று மாலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்திடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நாகராஜா கோவில் மிகவும் பிரசித்திப்பெற்ற கோவில்களில் ஒன்று ஆகும். இந்த கோவிலின் முக்கிய விழாவான கந்தசஷ்டி விழா ஆண்டுதோறும் மிகசிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது. தொடர்ச்சியாக 10 நாட்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 9-ந் தேதி நடத்தப்படும். எனவே பாரம்பரியமாக நடத்தப்படும் இந்த விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News