ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு தீர்த்தம் மீண்டும் வழங்கப்படுகிறது

Published On 2021-10-28 12:33 IST   |   Update On 2021-10-28 12:33:00 IST
தற்போது ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் அதன் சார்புக்கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் நேற்று முதல் தீர்த்தம் மற்றும் சடாரி ஆகியவை வழங்கப்படுகின்றன.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி முதல் பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி ஆகியவை வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மற்றும் அதனைச் சார்ந்த கோவில்களில் மீண்டும் தீர்த்தம், சடாரி ஆகியவை வழங்கலாம் என சம்பந்தப்பட்ட சன்னதி அர்ச்சகர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதையடுத்து தற்போது ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் அதன் சார்புக்கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் நேற்று முதல் தீர்த்தம் மற்றும் சடாரி ஆகியவை வழங்கப்படுகின்றன.

Similar News