ஆன்மிகம்
திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவில் குடமுழுக்கையொட்டி கடங்கள் புறப்பாடு நடந்தபோது எடுத்தபடம்.

திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவில் குடமுழுக்கு 24-ந்தேதி நடக்கிறது

Published On 2021-10-22 08:04 GMT   |   Update On 2021-10-22 08:04 GMT
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவில் குடமுழுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 24-ந் தேதி நடக்கிறது.
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாதசாமி கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவில் முழுவதும் ரூ. 5 கோடி மதிப்பில் திருப்பணி செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு குடமுழுக்குக்கு தயார் நிலையில் உள்ளது.

வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை குடமுழுக்கு நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை கடங்கள் புறப்பாடு நடைபெற்று யாகசாலை பிரவேசம் நடந்தது. தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

24-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 6 மணிக்கு கடங்கள் புறப்பாடும், 7 மணிக்கு அனைத்து பரிவார விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கும் நடக்கிறது. காலை 9 மணிக்கு பிரதான தெய்வங்களுக்கு பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. 9.30 மணிக்கு கடங்கள் புறப்பாடு நடக்கிறது 10.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுரங்களுக்கு குடமுழுக்கு நடக்கிறது.

காலை 11 மணிக்கு கோவில் குடமுழுக்கும், தீபாராதனையும் காண்பிக்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு மகா அபிஷேகமும், திருக்கல்யாண மகோற்சவமும், பஞ்சமூர்த்திகள் தீபாராதனையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சி. நித்யா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News