ஆன்மிகம்
அன்னாபிஷேகம்

அனைத்தும் அளிக்கும் அன்னாபிஷேகம்

Published On 2021-10-20 07:52 GMT   |   Update On 2021-10-20 07:52 GMT
அன்னாபிஷேகம் செய்வதால் நல்ல மழை பெய்து நல்ல முறையில் விவசாயம் நடைபெறும் எனவும், உணவுப் பஞ்சம் ஏற்படாது எனவும் வேதங்கள் தெரிவிக்கின்றன.
தட்சனுக்கு ஐம்பது பெண்குழந்தைகள். அவர்களில் அசுபதி தொடங்கி ரேவதி வரையிலான இருபத்தேழு பெண்களை சந்திரனுக்குத் திருமணம் செய்து தந்தான். சந்திரன் கார்த்திகை, ரோகிணி ஆகிய இருவரிடத்தும் மட்டும் மிகவும் பிரியமாக நடந்துகொண்டான். அதிலும் ரோகிணியிடம் மட்டும் அதிக நேசம் காட்டினான்.
மற்ற பெண்கள் எல்லோரும் சேர்ந்து தந்தையான தட்சனிடம் முறையிட்டனர். தட்சன் வெகுண்டு சந்திரனை அழைத்துக் காரணம் கேட்டான். சந்திரன் செய்தறியாது திகைக்கவே இன்றிலிருந்து உனது கலைகள் ஒவ்வொன்றாகத் தேயக்கடவது என்று சாபமிட்டான். சந்திரனின் கலைகள் ஒவ்வொன்றாகத் தேயத் தொடங்கின.

இதனால் சந்திரன் கைலாசம் சென்று பரமேஸ்வரனை வணங்கித் தஞ் சம் கேட்டான். பரமேஸ்வரனும் சந்திரனுக்கு அடைக்கலம் தந்து மூன்றாம் பிறைச்சந்திரனை தூக்கித்தன் தலைமேலே சூட்டிக் கொண்டான். சந்திரனை நோக்கி உன் தவற்றை உணர்வதற்காக இன்று முதல் உன் கலைகள் ஒவ்வொன்றாகத் தேயவும், பின் வளரவும் அருளினோம். ஆயினும் ஐப்பசி மாதப் பவுர்ணமி அன்று மட்டும் உன் பூரண பதினாறு கலைகளுடன் நீ மிளிர்வாய் என ஆசிகள் வழங்கினார்.

சந்திரன் பதினாறு கலைகளுடன் பூரணமாக மிகுந்த ஒளியுடன் காட்சி தருகின்றான். அத்தகைய ஐப்பசி மாதப் பவுர்ணமி புனித நாளினில் தான் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. எனவே அதனைக் கொண்டே ஈசனுக்கு அன்னம் செய்து அன்னா பிஷேகம் செய்கின்றோம்.

வானியல் அறிவியல் சாஸ்திரப் படியும் அக்டோபர், நவம்பர் மாதங் களில் சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவ தாக வும், அப்போது சந்திரன் மிக ஒளியுடன் காட்சி தருவதா கவும் தெரிவிக் கின்றது. எனவே இப்புனித நாட்களில் சிவாலயங் களில் சாயரட்சை எனப்பெறும் மாலை நேரப் பூஜை வேளை யில் அன்னா பிஷேக தரிசனம் நிகழ் கின்றது. அன்னத்தை வடித்து ஆறவைத்து சிவலிங்கத் தின் மேலே அழகாக அலங்காரம் செய்வார்கள் மேலும் புடலங்காய் போன்ற காய்கறிகளை அவித்து மேலே சார்த்துவார்கள். உப்பில்லாமல் வடை செய்து அணிவிப்பது வழக்கம். சிறப்பான அன்னாபிஷேக அலங்கார ஈசனுக்கு சந்திரன் உதயமானவுடன் சிறப்பான பூஜைகள் தீப ஆராதனைகள் நடைபெறும்.

பக்தர்கள் தரிசனத்திற்குப் பின் இரவு எட்டு மணியளவில் ஆராதனைகள் நடைபெறும். பக்தர்கள் தரிசனத்திற்குப் பின் இரவு எட்டு மணியளவில் அன்னாபிஷேக அலங்காரம் பிரிக்கப்பெற்று, சிவலிங்கத் திருமேனிமேல் சார்த்தப்பெற்ற அன்னத்தையும், காய்கறிகளையும், வடைமாலையையும் அர்ச்சகர் தனது தலைமேல் கூடையில் சுமந்து கொண்டு தீவட்டி, மேளதாளத்துடன், பக்தர்கள் சிவபுராணம் பாடிய வண்ணம் அல்லது அரஹர, சிவசிவ என நாமம் சொல்லிய வண்ணம் அருகில் உள்ள ஓடும் நீர் நிலைகளிலோ அல்லது ஆலயத் திருக்குளத்திலோ சென்று அதனை நீரில் கரைத்து தீபாராதனை செய்வார்கள்.

இதன் மூலம் மீன் போன்ற நீர்வாழ் உயிரினங் களுக்கும் கூட இறைவன் படியளப்பதாக ஐதீகம் சிவலிங்கத் திருமேனியைச் சுற்றியுள்ள அன்னத்தை தயிர் சாதமாக்கிப் பிரசாதமாக வழங்குவார்கள் குறிப்பாக குழந்தைப் பேறு வேண்டுவோர் இந்த அன்னத்தை உண்பதன் மூலம் நல்ல குழந்தைகள் பிறப்பார்கள் என்பது நம்பிக்கை.

அன்னாபிஷேகம் செய்வதால் நல்ல மழை பெய்து நல்ல முறையில் விவசாயம் நடைபெறும் எனவும், உணவுப் பஞ்சம் ஏற்படாது எனவும் வேதங்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News