ஆன்மிகம்
பாபநாசம் கோவில்

பாபநாசம் கோவிலில் இன்று ஆடிப்பூர விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை

Published On 2021-08-11 04:49 GMT   |   Update On 2021-08-11 04:49 GMT
பாபநாசம் கோவிலில் குறைவான பக்தர்களே தரிசனம் செய்யவந்த நிலையில் இன்று (புதன்கிழமை) ஆடிப்பூரம் விழாவுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தின் பிரசித்திபெற்ற பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து, தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி தரிசனம் செய்வார்கள்.

மேலும் இப்பகுதி சுற்றுலா தலமாக இருப்பதால் சுற்றுலா பயணிகளும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தருவது வழக்கம். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் பாபநாசம் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய நேற்று முன்தினம் வரை தடை விதித்தது.

இதைத்தொடர்ந்து நேற்று பாபநாசம் கோவிலில் குறைவான பக்தர்களே தரிசனம் செய்யவந்த நிலையில் இன்று (புதன்கிழமை) ஆடிப்பூரம் விழாவுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் தரிசனத்திற்கு நாளை (வியாழக்கிழமை) அனுமதி வழங்கப்படும் என்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News