ஆன்மிகம்
மனப்பாக்கம் கன்னியம்மன் கோவிலில் ஆடி மாதம் முழுவதும் சாமி தரிசனத்துக்கு தடை
ஆடி மாதத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தியும் சாமி தரிசனம் செய்வார்கள்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம், பொன்விளைந்தகளத்தூர் குறுவட்டம் நம்பர்-1 மணப்பாக்கம் கிராமத்தில் புகழ் பெற்ற கன்னியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தியும் சாமி தரிசனம் செய்வார்கள்.
தற்போது கொரோனா தொற்று பரவும் அச்சம் உள்ளதால் ஆடி மாதம் முழுவதும் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.