ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆண்டாள்

கூடலழகர் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா: சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆண்டாள்

Published On 2021-08-05 14:32 IST   |   Update On 2021-08-05 14:32:00 IST
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும், ஆடிப்பூரம் திருவிழாவின் 3-ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தார். ஆண்டாள் புறப்பாடு பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதே போல் மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் மூடப்பட்டு திருவிழாக்கள் உள்விழாவாக நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் யாரும் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.
 
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும், ஆடிப்பூரம் திருவிழாவின் 3-ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தார். ஆண்டாள் புறப்பாடு பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

இதில் அர்ச்சகர்கள், கோவில் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

Similar News