ஆன்மிகம்
பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு திருப்பாற்கடல்நாதன் அலங்காரம்

ஸ்ரீரங்கம் ஆடிப்பூர உற்சவம்: திருப்பாற்கடல் நாதன் அலங்காரம்

Published On 2021-08-05 12:54 IST   |   Update On 2021-08-05 12:54:00 IST
ஆடிப்பூர உற்சவத்தின் 3-வது நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு திருப்பாற்கடல்நாதன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆடிப்பூரத்திருவிழா 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ரெங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

ஆடிப்பூர உற்சவத்தின் 3-வது நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு திருப்பாற்கடல்நாதன் அலங்காரமும், உற்சவருக்கு கண்ணன் ஆண்டாளின் சிற்றில் சிதைத்தல் அலங்காரமும் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை இணையதளத்தில் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

Similar News