ஆன்மிகம்
3 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்ட தஞ்சை பெரியகோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள்.

3 நாட்களுக்கு பிறகு மீண்டும் தஞ்சை கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி

Published On 2021-08-05 05:14 GMT   |   Update On 2021-08-05 05:14 GMT
தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பிரதான கோவில்களிலும் கடந்த 1-ந் தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை 3 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆடி கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கோவில்களில் பக்தர்கள் அதிகஅளவில் கூடும்போது கொரோனா தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக கருதி தஞ்சை பெரியகோவில், புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில், சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில், கும்பகோணம் காசிவிஸ்வநாதர் கோவில், திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவில், உப்பிலியப்பன் கோவில் உள்ளிட்ட அனைத்து பிரதான கோவில்களிலும் கடந்த 1-ந் தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை 3 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது.

ஆகவிதிப்படி சாமி அலங்காரங்கள், பூஜைகள் மட்டும் வழக்கம்போல் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் கோவில்களுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தஞ்சை பெரியகோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சையை அடுத்த திட்டை கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என தகவல் பரவியது. இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரியிடம் கேட்டபோது, இது தவறான தகவல் எனவும், எல்லா கோவில்களை போல் திட்டை கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர் என தெரிவித்தார்.

Tags:    

Similar News