ஆன்மிகம்
ஆடிப்பெருக்கு வழிபாடு( பழைய படம்)

ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவையாறு காவிரி ஆற்றில் குளிக்க தடை

Published On 2021-08-02 07:53 GMT   |   Update On 2021-08-02 07:53 GMT
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவையாறு பேரூராட்சி எல்லைக்குட்பட்ட காவிரி கரையில் அமைந்துள்ள அனைத்து படித்துறைகளிலும் குளிப்பதற்கும், திதி கொடுப்பதற்கு அனுமதி இல்லை.
கொரோனா 3-வது அலையை தடுக்க முன்னெச்சரிக்கையாக நாளை(செவ்வாய்க்கிழமை) ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருவையாறு காவிரி படித்துறையில் பொதுமக்கள் குளிப்பதற்கும், வழிபாடு செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் வருகிற 8-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவையாறு பேரூராட்சி எல்லைக்குட்பட்ட காவிரி கரையில் அமைந்துள்ள அனைத்து படித்துறைகளிலும் குளிப்பதற்கும், திதி கொடுப்பதற்கு அனுமதி இல்லை.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் ஆகியோர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News