ஆன்மிகம்
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில்

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் ஆடிப்பூர விழா நாளை தொடக்கம்

Published On 2021-07-31 08:05 GMT   |   Update On 2021-07-31 08:05 GMT
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் ஆடிப்பூர விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 14 நாட்கள் நடக்கிறது.இந்த விழா அரசின் வழிகாட்டுதலின் படி நடக்கிறது.
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் ஆடிப்பூர விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 14 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நாளை கொடியேற்ற உற்சவம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை, அம்பாள் உள்புறப்பாடு ஆகியவை நடக்கிறது.

விழாவின் 10-வது நாளான 10-ந்தேதி காலை 8 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் கோகிலாம்பிகை அம்மனுக்கு தீர்த்தவாரியும், சிறப்பு அபிஷேகமும், வளையல் சாத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 11-ந்தேதி மாலை 5.30 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், 6.30 மணிக்கு கோகிலாம்பிகைக்கு மகா தீபாராதனையும், பிரம்ம தீர்த்தத்தில் தெப்ப உற்சவமும், 12-ந்தேதி கோகிலாம்பிகை அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.

இந்த விழா அரசின் வழிகாட்டுதலின் படி நடக்கிறது. பக்தர்கள் முக கவசத்துடன், சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News