ஆன்மிகம்
வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம்
ஆடிவெள்ளியை முன்னிட்டு வனபத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்தனர்.
மேட்டுப்பாளையம் நகரில் உள்ள மாகாளியம்மன் கோவில், பேட்டை மாரியம்மன் கோவில், காந்தி மைதானம் மாரியம்மன் கோவில், மகாதேவபுரம் குஞ்சப்பனை மாரியம்மன் கோவில், மற்றும் பிற அம்மன் கோவில்களில் ஆடிவெள்ளியை முன்னிட்டு சிறப்புபூஜைகள் நடைபெற்றது.
இதுபோல் பிரசித்தி பெற்ற மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,அலங்கார பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியை யொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
அதன்பின்னர் அம்மனுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் காலை 6 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் கொடிமரத்தின் முன்பு எலுமிச்சை தீபம் ஏற்றி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர்.