ஆன்மிகம்
ஆறகளூர் காமநாதீஸ்வரன் கோவில்

ஆறகளூர் காமநாதீஸ்வரன் கோவில் தேய்பிறை அஷ்டமி பூஜையில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

Published On 2021-07-30 03:40 GMT   |   Update On 2021-07-30 03:40 GMT
ஆகம விதிமுறைப்படி நடைபெறும் தேய்பிறை அஷ்டமி பூஜையை பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்து கண்டு களிப்பதுடன், சாமி தரிசனம் செய்து கொள்ள ஆறகளூர் காமநாதீஸ்வரன் கோவில் செயல் அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தலைவாசல் அருகே ஆறகளூர் காமநாதீஸ்வரன் கோவில் வளாகத்தில் வருகிற 31-ந் தேதி காலபைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு பூஜை நடைபெறும். இந்த பூஜையில் வழக்கமாக சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள். கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய இருப்பதால் பூஜையில் பக்தர்களை அனுமதிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் மாலை 6 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

ஆகம விதிமுறைப்படி நடைபெறும் தேய்பிறை அஷ்டமி பூஜையை பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்து கண்டு களிப்பதுடன், சாமி தரிசனம் செய்து கொள்ள ஆறகளூர் காமநாதீஸ்வரன் கோவில் செயல் அலுவலர் கவிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

Similar News