ஆன்மிகம்
நன்செய்இடையாறு மாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்

நன்செய்இடையாறு மாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்

Published On 2021-07-30 02:57 GMT   |   Update On 2021-07-30 02:57 GMT
பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய்இடையாற்றில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு யாக பூஜைகள் நடந்தன.
பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய்இடையாற்றில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று 108 சங்காபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு யாக பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கலசத்தின் முன்பு வலம்புரி, இடம்புரி சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடந்தது. பின்னர் மாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

விழாவில் நன்செய்இடையாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News