ஆன்மிகம்
வராகி அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி

ஆஷாட நவராத்திரி நிறைவு நாள்: மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த வராகி அம்மன்

Published On 2021-07-20 11:46 IST   |   Update On 2021-07-20 11:46:00 IST
ஆஷாடநவராத்திரி விழாவின் நிறைவு நாளான நேற்று தஞ்சை பெரிய கோவிலில் வராகி அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்ததையும், கொரோனா பரவல் காரணமாக கோவிலின் உள்பிரகாரத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோவிலில் வராஹி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வராஹி அம்மனுக்கு 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் 9-ம் தேதி தொடங்கியது. பின்னர் வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

வராஹி அம்மனுக்கு 10-ம்தேதி (சனிக்கிழமை) வராஹி அம்மன் மஞ்சள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

3-வது நாளான 11-ம்தேதி வராஹி அம்மன் குங்கும அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

4-ம் நாளான 12-ம்தேதி சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

4-ம் நாளான 13-ம் தேதி வராஹி அம்மன் தேங்காய்த்துருவல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

5-ம் நாளான 14-ம்தேதி மாலை மாதுளை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

6-ம் நாளான 15-ம் தேதி வராஹி அம்மனுக்கு நவதானிய அலங்காரம் செய்யப்பட்டது.

7-ம் நாளான 16-ம் தேதி வராஹி அம்மனுக்கு  வெண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டது.

9-ம் நாளான 17-ம் தேதி காய்கறி அலங்காரத்தில் வராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

நேற்றுடன் ஆஷாட  நவராத்திரி விழா நிறைவடைந்தது. ஆஷாடநவராத்திரி விழாவின் நிறைவு நாளான நேற்று தஞ்சை பெரிய கோவிலில் வராஹி அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கொரோனா பரவல் காரணமாக கோவிலின் உள்பிரகாரத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

Similar News