ஆன்மிகம்
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

Published On 2021-07-19 10:59 IST   |   Update On 2021-07-19 10:59:00 IST
புதுவையில் கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, கடந்த 3-ந்தேதி கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுதலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி சனீஸ்வரர் கோவிலும் திறக்கப்பட்டது.
உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக சனீஸ்வரர் கோவில் மூடப்பட்டது.

புதுவையில் கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, கடந்த 3-ந்தேதி கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுதலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி சனீஸ்வரர் கோவிலும் திறக்கப்பட்டது.

அரசு அனுமதித்துள்ளதையடுத்து புதுச்சேரி, தமிழகத்தில் இருந்து சாமி தரிசனம் செய்ய
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் முககவசம் அணிந்து இருந்தனர். ஆனால் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சமூக இடைவெளி கேள்விக்குறியாகவே இருந்தது.

கொரோனா 3-வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். எனவே பக்தர்கள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க கோவில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News