ஆன்மிகம்
திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்

திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்

Published On 2021-07-17 09:18 IST   |   Update On 2021-07-17 09:18:00 IST
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு வெள்ளிக்குடம் எடுத்து புறப்பட்டு காவிரி ஆற்றின் அய்யாளம்மன் படித்துறைக்கு கொண்டுவரப்பட்டது.

அங்கிருந்து காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு உறையூர் திருத்தாந்தோனி ரோட்டில் இருந்து மங்கள வாத்தியம் முழங்க யானை மேல் வெள்ளிக்குடம் வைத்து ஊர்வலம் புறப்பட்டு காலை 9.30 மணிக்கு கோவிலுக்கு வந்தடைந்தது.

பின்னர் சாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்துள்ளனர்.

Similar News