கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
26-ந் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம், 27-ந் தேதி இரவு குதிரை வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி, 28-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சாமி திருத்தேருக்கு எழுந்தருளலும், மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 29-ந் தேதி முதல் பிப்ரவரி மாதம் 1-ந் தேதி வரை சாமி இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.