ஆன்மிகம்

காசியில் பிந்து மாதவராக அருள்பாலிக்கும் மகாவிஷ்ணு

Published On 2019-05-31 05:59 GMT   |   Update On 2019-05-31 05:59 GMT
ராமேஸ்வரத்தில் சேது மாதவராகவும், திரிவேணி சங்கமத்தில் வேணி மாதவராகவும் எழுந்தருளியிருக்கும் மகாவிஷ்ணு, காசியில் பிந்து மாதவராக வீற்றிருந்து அருள்புரிகிறார்.
‘மாதவா’ என்பது மகாவிஷ்ணுவை குறிப்பதாகும். ‘மாதவம்’ என்பது பிந்து மாதவரைக் குறிக்கும். ராமேஸ்வரத்தில் சேது மாதவராகவும், திரிவேணி சங்கமத்தில் வேணி மாதவராகவும் எழுந்தருளியிருக்கும் மகாவிஷ்ணு, காசியில் பிந்து மாதவராக வீற்றிருந்து அருள்புரிகிறார்.

இவரது ஆலயம் பஞ்ச கங்கா காட்டில் அமைந்திருக்கிறது. பிரம்மா வழிபட்ட சிறப்புக்குரியவர், இந்த பிந்து மாதவர். சங்கு, சக்கரத்துடன் கதாயுதம் ஏந்தி காட்சி தருகிறார். ஆலயத்திற்கு வெளியே விஷ்ணு பாதம் இருக்கிறது.

அதற்கு கங்கை நீரை அபிஷேகம் செய்து, மலர்களைத் தூவி மக்கள் வழிபடுகின்றனர்.
Tags:    

Similar News