ஆன்மிகம்
கோவை இடிகரை வில்லீஸ்வரர் கோவிலில் சூரியஒளி லிங்கத்தின் மீது விழுந்த காட்சி.

வில்லீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மீது சூரியஒளி விழுந்ததால் பக்தர்கள் பரவசம்

Published On 2019-04-13 03:23 GMT   |   Update On 2019-04-13 03:23 GMT
இடிகரை வில்லீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மீது சூரியஒளி விழுந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து வில்லீஸ்வரருக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
கோவை இடிகரையில் பழமை வாய்ந்த வில்லீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவலிங்கத்தின் நெற்றியில் மூன்று நேர் கோடுகள் உள்ளன. இங்கு ஆவணி மாதத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் லிங்கத்தின் மீது விழும் இதனை நேரில் பார்ப்பவர்களுக்கு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் இந்த வருடம் பங்குனி மாதத்தில் வில்லீஸ்வரர் மீது கடந்த 5 நாட்களாக சூரியஒளி விழுந்தது. இதுகுறித்து அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். பின்னர் லிங்கத்தின் மீது சூரியஒளி விழுந்ததை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதேபோல கடந்த வாரம் துடியலூர் அருகில் உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலிலும் சூரிய கதிர்கள் இறைவனின் மீது விழுந்தது. வடமதுரை விருந்தீஸ்வரர், இடிகரை வில்லீஸ்வரர் மற்றும் கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் ஆகிய மூவரும் ஒரே நேர் கோட்டில் இருக்கும்படி கோவில்கள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News