ஆன்மிகம்
பொங்கல் வழிபாடு நடத்திய பெண்களில் ஒரு பகுதியினரை படத்தில் காணலாம்.

கரிக்ககம் சாமுண்டி கோவிலில் பெண்கள் பொங்கல் வழிபாடு

Published On 2019-03-20 03:19 GMT   |   Update On 2019-03-20 03:19 GMT
கரிக்ககம் சாமுண்டி கோவிலில் பெண்கள் பொங்கல் வழிபாடு நடத்தினார்கள். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
திருவனந்தபுரத்தில் பழமையான கோவில்களில் ஒன்று கரிக்ககம் சாமுண்டி தேவி கோவில். இந்த கோவிலில் பொங்கல் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பொங்கல் திருவிழா கடந்த 13-ந் தேதி குரு பூஜையுடன் தொடங்கியது. 17 மற்றும் 18-ந் தேதிகளில் தங்க ரதத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு நேற்று நடந்தது. காலை 10.15 மணிக்கு பொங்கல் வழிபாடு தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனர். பகல் 2.15 மணிக்கு பொங்கல் நிவேத்திய பூஜை நடந்தது.

கரிக்ககம் சாமுண்டி தேவி கோவிலில் நேற்று வெளிநாட்டினரும் தரிசனம் செய்தனர். பொங்கல் விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு சிறப்பு பஸ்களை இயக்கியது.

பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News