ஆன்மிகம்

இந்திரனின் தேரோட்டியான மாதளி

Published On 2019-02-08 07:51 GMT   |   Update On 2019-02-08 07:51 GMT
இந்திரனின் தேரோட்டியாக இருப்பவர் மாதளி. அவர் இந்திரனின் தேரோட்டியாக ஆன வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இந்திரனின் தேரோட்டியாக இருப்பவர் மாதளி. அவர் இந்திரனின் தேரோட்டியாக ஆனது எப்படி தெரியுமா? தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தப் போரில் இந்திரனின் மன ஓட்டத்தை அறிந்து, போரின் போக்கை கருத்தில் கொண்டு தேரைச் செலுத்தும், சமயோசித புத்தி கொண்டவர் இல்லாமல் இந்திரன் தவித்துப் போனான். தனக்கு தகுதியான தேரோட்டி கிடைப்பதற்காக அவன் வெகு காலம் காத்திருந்தான்.

இந்த நிலையில் சமிக்யா என்ற முனிவரின் மனைவி, ஒரு ஜோதிடரின் பேச்சைக் கேட்டு, தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளின் ஒன்றை வீதியில் விட்டு விட்டாள். அந்தக் குழந்தை, தேவலோக தலைவனான இந்திரனைச் சென்றடைந்தது. அந்தக் குழந்தையின் மதிநுட்பத்தை அறிந்த இந்திரன், குழந்தைக்கு ‘மாதளி’ என்று பெயரிட்டு வளர்த்தான். அதோடு பல கலைகளையும் கற்றுக் கொடுத்து, தன்னுடைய தேரோட்டியாக வைத்துக் கொண்டான்.
Tags:    

Similar News