ஆன்மிகம்

பரிக்கல் லட்சுமி நரசிம்மரை குலதெய்வமாக வணங்குபவர்கள்

Published On 2018-08-02 12:06 IST   |   Update On 2018-08-02 12:06:00 IST
பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை நிறைய பேர் குலதெய்வமாக ஏற்று உள்ளனர். லட்சுமி நரசிம்மரை கண்கண்ட தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.
பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை நிறைய பேர் குலதெய்வமாக ஏற்று உள்ளனர். குறிப்பாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராயர் இன மக்கள் பரிக்கல் லட்சுமி நரசிம்மரை கண்கண்ட தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். அங்குள்ள ராயர் மக்கள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பரிக்கல் வந்து வழிபட்டு செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

அதுபோல பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மரையும் நிறைய குடும்பத்தினர் தங்கள் குலதெய்வமாக ஏற்றுள்ளனர். தங்கள் குடும்பங்களில் நடைபெறும் அனைத்து சுப காரியங்களுக்கு முன்பும் பூவரசங்குப்பம் தலத்துக்கு வந்து வழிபாடு செய்ய அவர்கள் தவறுவதில்லை.

சிங்கிரிக்குடி நரசிம்மருக்கு பெரிய அளவில் இத்தகைய குலதெய்வ வழிபாடு ஆதரவாளர்கள் இல்லை. என்றாலும் அத்தலத்துக்கு நரசிம்மரை நாடிவரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

Tags:    

Similar News