ஆன்மிகம்
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார், நரசிம்மர் சர்வ அலங்காரத்தில் அருள்புரிந்த காட்சி.

சுதர்சன சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா

Published On 2018-06-23 06:42 GMT   |   Update On 2018-06-23 06:42 GMT
108 வைணவ திருத்தலங்களில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக போற்றப்படும் மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர், சோழவந்தானில் சுதர்சன சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
108 வைணவ திருத்தலங்களில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக போற்றப்படும் மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேக பெருமாள் கோவில். இந்த கோவிலில் மூலவர் காளமேகப் பெருமாளுக்கு அடுத்தபடியாக, சிறப்பு வாய்ந்ததாக போற்றப்படுவது சக்கரத்தாழ்வார், நரசிம்மர் சன்னிதி.

நேற்று இங்கு சுதர்சன சக்கரத்தாழ்வார் ஜெயந்தியையொட்டி, காலை முதல் மதியம் வரை சக்கரத்தாழ்வாருக்கும், நரசிம்மருக்கும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக சுதர்சன யாகம் நடந்தது.விழா ஏற்பாட்டை கோவில் உதவி ஆணையர் ராமசாமி, செயல் அலுவலர் ஜெயதேவி ஆகியோர் செய்திருந்தனர்.

வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள பிரளயநாதசாமி விசாக நட்சத்திர ஆலயத்தில் நேற்று சுதர்சன ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி, கோவில் பிரகாரத்தில் வலம்புரி விநாயகர் சன்னதி அருகே அமைந்துள்ள சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு விசாக நட்சத்திரத்தையொட்டி, இங்குள்ள சனீஸ்வரலிங்கம், பிரளயநாதசாமி (ராகு) ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற உள்ளது. 
Tags:    

Similar News