ஆன்மிகம்
வைகாசி பெருந்திருவிழா தீர்த்தவாரி உற்சவத்தில் அம்மன் ஊஞ்சலில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தீர்த்தவாரி திருவிழா

Published On 2018-06-08 02:09 GMT   |   Update On 2018-06-08 02:09 GMT
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவில் அம்மனுக்கு வைகையாற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 21-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தினசரி அம்மன் புறப்பாடு நடந்தது. 9-ம் நாள் பால்குடம், அக்னிசட்டி, பூப்பல்லக்கும், 10-வதுநாள் பூக்குழி விழாவும், 16-ம்நாள் தேரோட்டம் நடைபெற்றது.

நிறைவு நாளான நேற்றைய முன்தினம் மாலை 4.30 மணியளவில் திருவிழா கொடி இறக்கப்பட்டு மஞ்சள் நீராடுதல் நடந்தது. அம்மன் கேடயத்தில் எழுந்தருளி வைகை ஆற்றுக்குச் சென்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் தொடங்கி அம்மனுக்கு வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சள்ஆடும் நிகழ்ச்சி விடிய விடிய நடந்தது.

இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் வைகையாற்றிலிருந்து அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதியில் பவனி வந்து கோவிலை வந்தடைந்தார். 
Tags:    

Similar News