ஆன்மிகம்

விருத்தாசலம் ராஜகோபாலசுவாமி கோவில் பிரம்மோற்சவம் 26-ந்தேதி தொடங்குகிறது

Published On 2018-05-22 13:18 IST   |   Update On 2018-05-22 13:18:00 IST
விருத்தாசலம் ராஜகோபாலசுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில் பிரசித்தி பெற்ற ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவம் வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பின்னர் தொடர்ந்து 10 நாட்கள் உற்சவம் நடைபெறுகிறது. இதில் தினந்தோறும் மகா தீபாராதனை, சிறப்பு அலங்காரம், சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது.

ராஜகோபாலசுவாமி தினசரி ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் வருகிற 31-ந் தேதி மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 2-ந் தேதி வேடுபறி உற்சவமும் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 3-ந் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டமும், மாலையில் மணிமுக்தாற்றில் தீர்த்தவாரியும் நடக்கிறது. இதை தொடர்ந்து வருகிற 4-ந் தேதி பல்லக்கில் சுவாமி வீதிஉலாவும், 5-ந் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News