ஆன்மிகம்

ஈரோடு பழையபாளையம் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 5-ந் தேதி நடக்கிறது

Published On 2016-12-03 10:32 GMT   |   Update On 2016-12-03 10:32 GMT
ஈரோடு பழையபாளையம் கற்பக விநாயகர் கோவிலில் 5-ந் தேதி காலை 7 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
ஈரோடு பழையபாளையம் பிரிவு பாரிநகரில் கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக சீரமைக்கப்பட்டது.

இதை யொட்டி இன்று (சனிக்கிழமை) கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. மாலை முதற் கால பூஜை, வாஸ்து சாந்தி, பூமி தேவி பூஜை நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) 2-ம் கால பூஜை, கணபதி பூஜை, 3-ம் கால பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

வரும் 5-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை கணபதி பூஜை, புண்யாகம், தீபாராதனை, கலசங்கள் கோவில் வலம் வரும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து காலை 7 மணிக்குள் கற்பக விநாயகர் கோபுர மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

மேலும் கருவறை தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், அபிஷேகம் நடைபெறுகிறது. விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

Similar News