ஆன்மிகம்

ஆடி அமாவாசை: குறிச்சி காசி விசுவநாதர் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏற்பாடு

Published On 2016-08-01 09:46 IST   |   Update On 2016-08-01 09:46:00 IST
மானாமதுரை அருகே உள்ள குறிச்சி காசி விசுவநாதர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள குறிச்சியில் வழிவிடு பெரியநாச்சி அம்மன் கோவில் வளாகத்தில் காசி விசுவநாதர் கோவில் உள்ளது. இங்கு காசியில் இருந்து பூஜித்து கொண்டு வரப்பட்ட காசி விசுவநாதர், அன்னபூரணி, காசி தட்சிணாமூர்த்தி, துர்க்கை, அனுமான், நவக்கிரகங்கள் சன்னதி உள்ளது.

ஆண்டுதோறும் தை, ஆடி மகாளய அமாவாசை தினங்களில் முன் னோர்களுக்கு தர்ப்பணம் பூஜை நடைபெறும். வருகிற 2-ந்தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 6 மணி முதல் 11 மணி வரை முன்னோர்கள் தர்ப்பண பூஜை நடை பெறுகிறது.

அதைத் தொடர்ந்து குருப் பெயர்ச்சியை முன்னிட்டு மாலை 3 மணி முதல் 5 மணி வரை மகா யாகம் நடைபெறுகிறது. இதுகுறித்து கோவில் டிரஸ்டி எஸ்.பி.தேவர் கூறியதாவது:-

காசியில் எப்படி முன் னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறதோ அதேபோல் இங்கு பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்பபணம் செய்து காசி விஸ்வநாதரை கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டு காசியில் முன்னோர்களுக்கு திதி கொடுத்த பலனை அடையலாம்.

குரு பெயர்ச்சி யாகத்திலும் கலந்து கொண்டு காசி குருபகவான் அரள் ஆசி பெற்று செல்லலாம். தர்ப்பண பூஜையில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு எள், வாழைப்பழம், அகத்தி கீரை பூஜை பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. காசி செல்ல முடியாத பக்தர்கள் இங்கு வந்து காசியில் எப்படி தொட்டு வழிபாடு செய்யப்படுகிறதோ அது போல் வழிபட்டு செல்லலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News