ஆன்மிகம்
சென்னிமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
சென்னிமலை முருகன் கோவில் நேற்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.
ஆடிகிருத்திகையினை முன்னிட்டு சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகமாக இருந்தது. மற்ற மாதங்களில் வரும் கிருத்திகையினை விட ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை மிக விஷேசமாக கொண்டாடப்படுகிறது. இதனால் கிருத்திகை விரதம் இருப்பவர்கள் சென்னிமலை முருகனை தரிசிக்க அதிக அளவில் வந்திருந்தனர்.
காலை நடை திறப்பு 5 மணிக்கு இருந்தது கிருத்திகை விழாகுழு சார்பாக சிறப்பு பூஜை நடத்தினர். மதியம் பக்தர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது. மலை கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் சார்பாக பஸ் இயக்கப்பட்டது. ஆடிகிருத்திகையையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்னிமலை முருகனை வழிபட்டு செல்கிறார்கள்.