ஆன்மிகம்
ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகைகளை விட ஆடிமாதத்தில் வரும் கிருத்திகை விசேஷமாக கருதப்படுகிறது.
இந்த ஆடி கிருத்திகை நேற்று வந்து உள்ளது. இதை யொட்டி ஈரோடு மாவட்ட முருகன் கோவில்களில் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
சென்னிமலை முருகன் கோவில், ஈரோடு திண்டல்மலை வேலாயுதசாமி கோவில், கோபி பச்சமலை முருகன் கோவில் உள்பட ஈரோடு மாவட்டத்தில் உள்ளஅனைத்து முருகன் கோவில்களிலும் இன்று முருகப்பெருமானுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இதன்பிறகு விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.
இதில் ஏராளமான பக்தாகள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.