ஆன்மிகம்

சாமூண்டீஸ்வரி கோவிலில் சண்டி ஹோமம் இன்று தொடங்கி 27 நாட்கள் நடக்கிறது

Published On 2016-07-22 11:21 IST   |   Update On 2016-07-22 11:21:00 IST
ஈரோடு அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி சாத்தப்பூரில் புகழ்மிக்க ஆதிபெரிய சாமூண்டீஸ்வரி கோவிலில் இன்று தொடங்கி தொடர்ந்து 27 நாட்கள் சண்டி ஹோமம் நடக்க உள்ளது.
ஈரோடு அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி சாத்தப்பூரில் புகழ்மிக்க ஆதிபெரிய சாமூண்டீஸ்வரி கோவில் உள்ளது.

இந்த கோவிலில் தொடர்ந்து 27 நாட்கள் சண்டி ஹோமம் நடக்க உள்ளது. இந்த சண்டி ஹோமம் இன்று தொடங்கி தொடர்ந்து நடக்கிறது.

உலக அமைதி, நிர்வளம் பெருகவும், உலக மக்கள் நலமுடன் வாழவும் இந்த சண்டி ஹோமம் நடைப்பெறுகிறது.

ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கு தனி தனியாக ஹோமங்கள் நடைப்பெறுகிறது. தினமும் காலையில் விக்னேஸ்வர பூஜையும் சங்கல்பம் கலச ஆவாஹனமும், தேவி மகாத்மிய பாராயணமும் நடக்கிறது.

மதியம் 1 மணிக்கு மேல் கலச அபிஷேக அர்ச்சனை மற்றும் தீபாரதனையும் நடக்கிறது. இந்த ஹோமங்களை சிருங்கேரி ஸ்ரீ மடமுத்ராதிகாரிய புதூர் பத்ம நாப அய்யர் தலைமையில் நடக்கிறது.

Similar News