ஆன்மிகம்

மானாமதுரை கோவில்களில் ஆடி பவுர்ணமி விழா: வீர அழகர் பூப்பல்லக்கில் வீதி உலா

Published On 2016-07-20 14:32 IST   |   Update On 2016-07-20 14:32:00 IST
மானாமதுரை பகுதியில் வீரஅழகர் பூப்பல்லக்கில் வீதி உலா வந்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சிவகங்கை ரோட்டில் உள்ள தயாபுரம் முத்து மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் திருவிளக்கு பூஜை செய்தனர். இதில் முத்து மாரியம்மனுக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டு கோவில் பூசாரி சுப்பிரமணியன் சிறப்பு பூஜைகளை செய்தார்.

இதேபோல் வீரஅழகர் கோவிலில் நடைபெறும் ஆடி பிரம்மோற்சவ விழாவில் மானாமதுரை சுந்தரபுரம் குண்டுராயர் வீதி சிவகங்கை ரோடு வியாபாரிகள் சார்பில் நடந்த விழாவில் வீரஅழகர் பூப்பல்லக்கில் வீதி உலா வந்தார்.

மானாமதுரை அருகே உள்ள பஞ்சமுக பிரித்தியங்கிரா தேவி கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பிரித்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம் சாத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குறிச்சி கிராமத்தில் உள்ள வழிவிடு பெரியநாச்சி அம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு பூஜை நடந்தது.

தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மானாமதுரையில் உள்ள ஓம்சக்தி கோவில், நம்பி நாகம்மாள், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

Similar News