ஆன்மிகம்
பைரவர்

அஷ்டமி நாளில் பைரவர் சன்னதியில் பாட வேண்டிய பாடல்

Published On 2021-09-30 06:27 GMT   |   Update On 2021-09-30 06:27 GMT
அஷ்டமி போய்விட்டால் அடுத்தநாள் நவமி. இந்த நவமிக்கு ஆவிதவா நவமி என்று பெயர். மகாளயத்தில் சுமங்கலிகளுக்கான தர்ப்பண நாளாக நவமியை கொடுத்திருக்கிறார்கள்.
அம்பலத்தாடுகின்ற இறைவனே... புனிதனே... என்னை இதுவரை அடி அடி என்று அடித்தாய் அல்லவா? அடித்தது போதும். இனி அணைத்திடல் வேண்டும். அம்மையப்பா... என்னால் தாங்கமுடிய வில்லை என்று இறைவனின் திருவடியை பிடித்து கதறுகின்ற பாடலை இன்று பைரவர் கோவிலுக்கு சென்று சொன்னாலும் சரி, வீட்டில் விளக்கு வைத்து சொன்னாலும் சரி அற்புதமான பாடல். இந்த பாடலை வள்ளலார் அவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்.

தடித்த ஓர் மகனை தந்தை ஈண்றடித்தால்
தாயுடன் அணைப்பள்
தாய் அடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன்
இங்கு எனக்கு பேசிய தந்தையும்
தாயும் பொடித்திருமேனி அம்பலத்தாடும்
புனித நீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
அம்மை அப்பா இனி ஆற்றேன்
இந்த பாட்டை மட்டும் சொன்னால் இறைவன் அப்படியே வந்து கட்டிப்பிடித்துக் கொள்வாராம். எல்லா பிறவிகளுக்கும் பற்றித் தொடருகின்ற தாயும் தந்தையுமாக இருக்கக் கூடிய தயாபரம்.

கோவிலுக்கு சென்று இந்த பாடலை படித்து வேண்டுவதன் மூலமாக இன்றைய தினம் ஒரு அற்புதமான பொழுதாக அமையும். அஷ்டமி போய்விட்டால் அடுத்தநாள் நவமி. இந்த நவமிக்கு ஆவிதவா நவமி என்று பெயர். விதவா என்றால் கணவன் போன பிறகு மனைவி இருந்தால் கணவன் இல்லாதவள் என்பதற்காக அவளுக்கு விதவா, அதாவது விதவை என்று பொருள். ஆவிதவா என்று சொன்னால் சுமங்கலிகள் என்று அர்த்தம். முன்னோர்களில் கணவருக்கு முன்பே மனைவி காலமாகும் போது சுமங்கலி பிரார்த்தனை நடத்துவார்கள். அப்படி நடத்தினாலும்கூட மகாளயத்தில் சுமங்கலிகளுக்கான தர்ப்பண நாளாக நவமியை கொடுத்திருக்கிறார்கள். அவர்களை நினைத்து அந்த மகாளயத்தை செய்யலாம். குறைந்தபட்சம் சுமங்கலிகளை நினைத்து வணங்கலாம். அவர்களுடைய அருளாசியை பெறலாம்.
Tags:    

Similar News