ஆன்மிகம்
தன்வந்திரி

தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி இந்த ஸ்லோகத்தை சொல்லுங்க..

Published On 2021-07-31 08:45 GMT   |   Update On 2021-07-31 08:45 GMT
உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத் தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம். தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்றொரு பழமொழி நம்மூரில் உண்டு. பொதுவாக இந்தப் பழமொழியை, தேக ஆரோக்கியத்துக்குத்தான் அதிக அளவில் உதாரணமாகச் சொல்லியிருக்கிறார்கள், மக்கள்.  

ஆமாம், தேகம் ஆரோக்கியத்துடன் இருந்துவிட்டால், மற்ற எல்லா வேலைகளையும் திறம்படச் செய்யமுடியும். தவிர, உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத் தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம். எனவே தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்தரேயே அம்ருதகலச ஹஸ்தாய
சர்வாமய நாசாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீமகாவிஷ்ணவே நம:

Tags:    

Similar News