ஆன்மிகம்
லலிதாம்பிகை

சகல செளபாக்கியங்களையும் அருளும் லலிதாம்பிகையின் ஒற்றை வரி மந்திரம்

Published On 2021-07-17 09:54 IST   |   Update On 2021-07-17 17:34:00 IST
லலிதாம்பிகையை மனதார வழிபட்டால், இதுவரை வீட்டில் தடைப்பட்டிருந்த மங்கல காரியங்களையெல்லாம் நடத்தித் தந்தருள்வாள். கணவன் மனைவி இடையே ஒற்றுமையையும் அன்பையும் பலப்படுத்தி அருள்வாள் லலிதாம்பிகை.
லலிதாம்பிகையை எவரொருவர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அவளின் திருவடிகளைச் சரணடைந்து, வணங்கி வருகிறார்களோ, அவர்களின் அனைத்து குறைகளையும் களைந்தெடுத்து அருளுவாள். சகல செளபாக்கியங்களையும் வழங்கிக் காப்பாள்.

‘ஓம் லலிதாம்பிகாய நமஹ’

இந்த ஒற்றை வரி மந்திரத்தை தினமும் சொல்லி வாருங்கள். வெள்ளிக்கிழமைகளில் காலையும் மாலையும் சொல்லி வழிபடுங்கள். அதேபோல், வீட்டில் விளக்கேற்றுங்கள். கோவிலில் அம்பாள் சந்நிதியில் விளக்கேற்றுங்கள். விளக்கேற்றி, இந்த மந்திரத்தை 108 முறை ஜபித்து வேண்டிக் கொள்ளுங்கள். சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். குறிப்பாக, பெண்கள் இந்த மந்திரத்தைச் சொல்லச் சொல்ல, பிரிந்த கணவன் விரைவில் மனம் மாறி வந்து சேருவார். குடும்பத்தில் இதுவரை இருந்த அழுகையும் கவலையும் துடைக்கப்படும் .இல்லத்தில் இருந்த தரித்திர நிலையை மாற்றி அருளுவாள் லலிதாம்பிகை..

Similar News