ஆன்மிகம்
அரச மரத்தை வலம் வரும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

அரச மரத்தை வலம் வரும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

Published On 2020-11-24 09:45 GMT   |   Update On 2020-11-24 09:45 GMT
அரச மரத்தை வலம் வரும் போது இந்த ஸ்லோகத்தை 108 முறை மனதிற்குள் சொல்லிக்கொண்டு வலம் வர வேண்டும். இந்த மந்திரத்தை சொல்வதால் துன்பங்கள் பறந்தோடும்.
அமாவாசையும், சந்திர பகவானுக்கு உரிய திங்கள்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லி வலம் வருதல் நலம்.

மூலதோ பிரம்மரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபினே
அக்ரத: சிவ ரூபாய
விருக்ஷ ராஜயதே நம

இந்த ஸ்லோகத்தை 108 முறை மனதிற்குள் சொல்லிக்கொண்டு வலம் வர வேண்டும். கூடவே உங்கள் சக்திக்கு ஏற்ப பழமோ பூஜை சார்ந்த பொருட்களோ மரத்தின் முன்னே சமர்ப்பிக்க வேண்டும்.

108 முறை பிரகார வலம் முடிந்ததும் அந்த பொருட்களை தானம் அளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். 
Tags:    

Similar News