ஆன்மிகம்
நடராஜர்

தில்லையம்பல ஶ்ரீஆனந்த நடராஜப் பெருமான் திருமலரடிகள் போற்றி

Published On 2020-08-03 07:13 GMT   |   Update On 2020-08-03 07:13 GMT
அருள்தரும் ஶ்ரீசிவகாமி அம்மை உடனுறை அருள்மிகு தில்லையம்பல ஶ்ரீஆனந்த நடராஜப் பெருமான் பொன்னார் திருமலரடிகள் போற்றி போற்றி!!
அருள்தரும் ஶ்ரீசிவகாமி அம்மை உடனுறை அருள்மிகு தில்லையம்பல ஶ்ரீஆனந்த நடராஜப் பெருமான் பொன்னார் திருமலரடிகள் போற்றி போற்றி!!

சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
திருச்சிற்றம்பலம்

அர அர நமப் பார்வதிபதயே!!
அர அர மகாதேவா!!

தென்னாடுடைய சிவனே போற்றி!!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி!!
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி!!

தென்தில்லை மன்றினுல் ஆடி போற்றி!!
இன்று எனக்கு ஆரமுது ஆனாய் போற்றி!!

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!!
சீரார் திருவையாறா போற்றி!!

அண்ணாமலை மலை எம் அண்ணா போற்றி!!
கண்ணார் அமுதக் கடலே போற்றி!!

பராய்த்துறை மேவி பரனே போற்றி!!
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!!

ஆடக மதுரை அரசே போற்றி!!
கூடல் இலங்கு குருமணி போற்றி!!

சீரார் பெருந்துறை நம் தேவனடி போற்றி!!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!!

காவாய்கனகத் திரளே போற்றி!!!
கயிலை மலையானே போற்றி போற்றி !!!

பெருமான் திருவடிக்கு தேவாரம்

இறந்தார்க்கும் என்றும் இறவா தார்க்கும்
இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று
பிறந்தார்க்கும் என்றும் பிறவா தார்க்கும்
பெரியார்தம் பெருமையே பேச நின்று
மறந்தார் மனத்தென்றும் மருவார் போலும்
மறைக்காட் டுறையும் மழுவாட் செல்வர்
புறந்தாழ் சடைதாழப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

பெருமான் திருவடிக்கு திருவாசகம் எனும் தேன்

அரைசே பொன்னம் பலத்தாடும் அமுதே என்றுன் அருள்நோக்கி இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற் றிருந்தே வேசற்றேன்
கரைசேர் அடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்துன் னடியேன்பால்
பிரைசேர் பாலின் நெய்போலப் பேசா திருந்தால் ஏசாரோ.

பெருமான் திருவடிக்கு திருவிசைப்பா

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே

பெருமான் திருவடிக்கு திருப்பல்லாண்டு

மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே

பெருமான் திருவடிக்கு பெரியபுராணம்

ஆடிய திருமுன் பான
அம்பொனின் கோபு ரத்தின் ஊடுபுக் கிறைஞ்சி ஓங்கும்
ஒளிவளர் கனக மன்றில் நாடகச் செய்ய தாளை
நண்ணுற வுண்ணி றைந்து நீடும்ஆ னந்த வெள்ளக்
கண்கள்நீர் நிரந்து பாய

தென்னாடுடைய சிவனே போற்றி!!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி!!
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி!!

தென்தில்லை மன்றினுல் ஆடி போற்றி!!
இன்று எனக்கு ஆரமுது ஆனாய் போற்றி!!

காவாய் கனகத் திரளே போற்றி!! கயிலைமலையானே போற்றி போற்றி!!
Tags:    

Similar News