ஆன்மிகம்
சிவன் பார்வதி

பதவியும், அதிகாரமும் பெற பலன் தரும் ஸ்லோகம்

Published On 2020-03-11 13:31 IST   |   Update On 2020-03-11 13:31:00 IST
ஆதிசங்கரர் அருளிய இத்துதியை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்து வந்தால் அதிகாரம், கூடுதல் சலுகைகளோடு கூடிய உயர்ந்த பதவி கிடைக்கும்.
த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண ஜநிதானாம் தவ சிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர் யா விரசிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹன மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே சச்வன் முகுலித கரோத்தம்ஸ மகுடா

பொதுப் பொருள்: சிவ பத்தினியான அன்னையே, நமஸ்காரம். உங்கள் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படும் பூஜைகள் எல்லாம் உன்னுடைய முக்குணங்களை அனுசரித்துத் தோன்றிய மும்மூர்த்திகளுக்கும் உரிய பூஜையாகும். அவர்கள் மூவரும் உங்களுடைய திருவடிகளைத் தாங்கும் ரத்தினப் பலகைக்கு அருகே தத்தமது கிரீடங்களுக்கு மேலாகத் தம் கரங்களைக் குவித்து எப்போதும் வழிபடும் வகையில் சிறப்பு பெற்றவளே, நமஸ்காரம்.

Similar News