ஆன்மிகம்
முருகன் வள்ளி தெய்வானையுடன்

கந்தனை போற்றி துதித்திடும் தமிழ் துதி

Published On 2020-03-03 13:36 IST   |   Update On 2020-03-03 13:36:00 IST
கந்தனை போற்றி துதித்திடும் இந்த தமிழ் துதியை தினமும் அல்லது செவ்வாய் கிழமை அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கை வளமாகும்.
வந்த வினைகளையும், வருகின்ற வல்வினைகளையும் போக்கியருளும் கந்தனை போற்றி துதித்திடும் தமிழ் துதி இது. இந்த துதியை தினமும் அல்லது செவ்வாய் கிழமை, அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கை வளமாகும்.

மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி - காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
மலரடி போற்றி - அன்னான்
சேவலும் மயிலும் போற்றி
திருக்கைவேல் போற்றி போற்றி

Similar News